சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 42-வது மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக மற்றும் இந்திய மூத்தோர் கூட்டமைப்பு சார்பில் நேரு விளையாட்டு அரங்கில் மே 1ஆம் தேதி வரை தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் 32 மாநிலங்களில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த 600 வீரர் வீராங்கள் பங்கேற்க உள்ளனர். தொடக்க விழாவில் அமைச்சர்கள் மெய்யநாதன், மா.சுப்பிரமணியன், மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.