மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரேவின் வீட்டின் முன் ஹனுமன் சாலிசா பாடப்போவதாக அறிவித்திருந்த எம்பியும் நடிகையுமான நவநீத் கவுர் ரானா, அவரது கணவர் எம்எல்ஏ ரவி ரானா இருவரையும் மும்பை போலீஸார் கைது செய்தனர்.
அமராவதி தொகுதி எம்பி, நவநீத் ரானாவும் அவரது கணவர் எம்எல்ஏ ரவி ராணாவும் மாநில முதல்வர் உத்தவ் தாக்ரேவின் தனிவீடான மாதோஸ்ரீ முன்பு ஹனுமன் சாலிசா பாடப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இருவரையும் அவர்கள் இல்லத்தில் வைத்து மும்பை போலீஸார் கைது செய்தனர். மாநில அரசின் நடவடிக்கைக்கு முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.