உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதில், அங்குள்ள குடியிருப்புக் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்திருப்பதை காட்டும் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மரியுபோல் நகரை கைப்பற்றும் நோக்கில் அங்கு ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி சண்டையிட்டு வருகின்றனர். இதனிடையே ஈஸ்டர் பண்டிகையையொட்டி, போர் நிறுத்தம் அறிவித்து மனிதாபிமான வழித்தடங்களை திறந்து விடுமாறு உக்ரைனிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.