அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் அரிய வகை கார்ப்ஸ் மலர் பூக்கும் வீடியோ டைம் லேப்ஸ் முறையில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா பகுதியை பூர்விகமாக கொண்ட கார்ப்ஸ் மலர் அழுகிய சதை போன்ற மணத்தை வெளியிடும் உலகின் மோசமான மலர் என ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது.
அழிந்து வரும் வெப்ப மண்டல தாவரமான கார்ப்ஸ் மலர் முழுமையாக மலர 10 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளும் என அராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.