நாளை மறுநாள் பிரதமர் மோடி காஷ்மீருக்கு செல்ல உள்ள நிலையில், இரு வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர்.
சத்தா முகாமில் இருந்து துணை ராணுவப்படை வீரர்கள் 15 பேரை, காலை பணிக்காக ஏற்றி சென்ற ராணுவ பேருந்து மீது அதிகாலை நாலரை மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர். துணை ராணுவப்படையினர் நடத்திய பதில் தாக்குதலைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில், துணை ராணுவப்படையைச் சேர்ந்த உதவி துணை ஆய்வாளர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் இரு வீரர்கள் காயமடைந்தனர்.
மற்றொரு சம்பவத்தில், சுன்ஜவான் ராணுவ முகாம் அருகே அதிகாலை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சோதனை நடத்திய போது, ஒரு கட்டிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.