பிரிட்டனில் செல்ஃப் டிரைவிங் கார் எனப்படும் ஓட்டுநர் ஸ்டீரிங்கை பிடிக்காமல் தானாக இயங்கும் கார்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்த சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றங்கள் கொண்டுவர அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரைவு விதியின் படி இனி ஒரே லேனில் 59.5 கிலோ மீட்டர் வேகத்திற்கு கீழ் செல்லும் செல்ஃப் டிரைவிங் காரின் ஸ்டீரிங் வீல் உள்ள இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் திரைப்படம் பார்க்கவும், ஆன்லைன் கேம்கள் விளையாடவும், இணையதளங்களை திறந்து பார்க்கவும் அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒருவேளை விபத்து நடந்தாலும் கூட ஓட்டுநர் மீது வழக்கு பதியப்படமாட்டாது எனவும், சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்நாட்டின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், சாலை சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஸ்டீரிங்கை இயக்க ஓட்டுநர்கள் தயாராக இருக்க வேண்டுமெனவும், ஸ்டீரிங்கை பிடிக்கும் போது கட்டாயமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.