ஓ.டி.டி. தளத்தில் முன்னணி நிறுவனமான நெட்பிளிக்ஸ், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 100 நாட்களுக்குள்ளாக 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்திருக்கும் நிலையில், பங்குச்சந்தையிலும் அந்நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
சுமார் 10 ஆண்டுகளாக முன்னணியில் இருந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் சந்தாதாரர்களை இழப்பது இதுவே முதன்முறையாகும். உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷ்யாவில் தனது சேவைகளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நிறுத்தியிருந்த நிலையில், இதுவே சந்தாதாரர்கள் இழப்பு காரணமாக இருக்கலாம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் இந்த காலாண்டில் 1.6பில்லியன் டாலாராக இருக்கும் நிலையில், அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சுமார் 25 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.