செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர்.. பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.!

Apr 17, 2022 08:15:03 PM

இரண்டு நாள் பயணமாக வருகிற 21-ந் தேதி இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் நரேந்திர மோடியை 22-ந் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பிறகு போரிஸ் ஜான்சன் இதற்கு முன் இருமுறை இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா காரணமாக இருமுறையும் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவிலும் சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் பங்கேற்க இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அந்த திட்டம் ரத்தானது. இந்த நிலையில், வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

21-ந் தேதி குஜராஜ் மாநிலம் அகமதாபாத்திற்கு வரும் போரிஸ் ஜான்சன், முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது, இந்தியாவிலுள்ள முக்கிய தொழில்களில் பெரிய அளவில் முதலீடு செய்வதற்கான அறிவிப்பையும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிடுவார் என கூறப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியா - இங்கிலாந்து இடையேயான வர்த்தகத்தை 2035 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 37 பில்லியன் டாலராக அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதனையடுத்து 22-ந் தேதி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆசிய பசிபிக் நாடுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை இருதரப்பிலும் வலுப்படுத்துவது குறித்தும் போரிஸ் ஜான்சனும், நரேந்திர மோடியும் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே, இந்திய சுற்றுப்பயணம் குறித்து கூறியுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்தின் மதிப்புமிக்க கூட்டாளி இந்தியா என தெரிவித்துள்ளார். உலக நாடுகள் மத்தியில் இந்தியா ஒரு பெரிய பொருளாதார சக்தியாகவும், மிகப்பெரிய நாடாகவும் உள்ளது எனவும் அவர் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

சில சர்வாதிகார நாடுகளிடம் இருந்து காத்துக் கொள்ள இந்தியாவும், இங்கிலாந்தும் இணைந்து பயணிப்பது அவசியம் எனக் கூறியுள்ள போரிஸ் ஜான்சன், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகியவை இரு நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான தேவைகளாக இருக்கிறது என குறிப்பிட்ட போரிஸ் ஜான்சன், அதனை பூர்த்தி செய்யும் வகையில் தமது பயணம் இருக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

 


Advertisement
சார்ஜா சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கம்
தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானம்
தமிழகத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் விமானக் கட்டணம் உயர்வு
பெண்ணின் கழுத்தை அறுத்து 30 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொலைகாரர்களுக்கு போலீசார் வலை
கஞ்சா போதையில் இருந்த மாணவர்களை தட்டிக்கேட்ட அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாளால் வெட்டு... மாணவன் உள்பட 2 பேர் கைது
கோவளத்தில் சி.சி.டி.வி பொருத்தப்பட்டது தெரியாமல் மீன் திருடி விற்பனை செய்து வந்த 2 திருநங்கைகள்
போலி சான்றிதழ்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
''மக்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்பும் காங்கிரஸ் கட்சி" - பிரதமர் மோடி
கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
பாதுகாப்பு பணியின் போது ரம்மி விளையாடிய காவலர்

Advertisement
Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..


Advertisement