இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து அவர்களை தீவிரவாத செயல்களுக்குத் தூண்டியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து சிரியாவுக்கு இளைஞர்களை அனுப்பி வைக்க உடந்தையாக இருந்ததாக கடந்த 2020 ஆம் ஆண்டு அப்துர் ரஹ்மான் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது சில இளைஞர்களின் பெயர்களை அவர் தெரிவித்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தீவிரவாதப் பயிற்சி பெற சிரியாவுக்கு இளைஞர்களை அனுப்பவும் தீவிரவாத செயல்களுக்கும் நிதி திரட்டியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது