சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1970ஆம் ஆண்டு முதுகலை பொருளியல் படித்த மாணவர்கள் அரை நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் ஒன்று கூடி மகிழ்ந்தனர்.
1968 - 1970 ஆண்டுகளில் முதுகலை பொருளியல் படித்த 31 மாணவர்கள் இந்திய ஆட்சிப் பணி, பேராசிரியர், மாநகராட்சி ஆணையர், அரசு பணி, தொழில் முனைவோர் எனப் பல பதவிகளில் பணியாற்றியுள்ளனர்.
குடும்பம், பணிச்சூழல் ஆகியவற்றால் படிப்பு முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே இருந்த நிலையில், வாட்ஸ் அப் குழுவில் ஒன்றிணைந்து நேரில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். இளம்வயது நண்பர்களை 52 ஆண்டுகளுக்குப் பின் பார்த்தது பெருமகிழ்ச்சி தருவதாக நெகிழ்ச்சியுடன் கூறினர்.
31 பேரில் ஒரே ஒரு மாணவியாக இருந்த தன்னை ஆண் நண்பர்கள் மதிப்புடனும் பாதுகாப்புடனும் நடத்தியதும், செய்த உதவிகளும் இன்றும் வியப்பூட்டுவதாகத் தெரிவித்தார்.