மும்பை - அகமதாபாத் வரையிலான புல்லட் ரயில் திட்டத்தில் குஜராத் பகுதியில் 2027 ஆம் ஆண்டு முதல் ரயில் இயக்கப்படும் என்று தேசிய அதிவேக ரயில் கார்பரேசன் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதிப்பு, நிலம் கையகப்படுத்தும் பிரச்சனையால் இத்திட்டம் தாமதமாகி உள்ளதாக கூறினார்.
புல்லட் ரயில் திட்டத்தில் குஜராத்தில் மட்டும் 8 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுவதாகவும், அதில் சூரத் ரயில் நிலையம் 48 ஆயிரம் சதுர மீட்டரில் மிகப் பெரியதாக அமைக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
இந்த புல்லட் ரயில் திட்டத்தால் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், ஒரு லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக அக்னிஹோத்ரி தெரிவித்தார்.