மணிப்பூர் மாநிலம் காக்சிங் மாவட்டத்தில் கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
வேளாண் நிலங்களை கையகப்படுத்தி விளையாட்டு பல்கலைக்கழகம் மற்றும் உணவுப் பூங்கா அமைக்க அரசின் முடிவுக்கு எதிராக அப்பகுதிமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த திட்டத்திற்காக பள்ளம் தோண்டி வேலி அமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்ட போது கிராம மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் மீது சரமாரியாக கல்வீசி வாகனங்களுக்குத் தீ வைத்த வன்முறையாளர்களை விரட்ட போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.