இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சேவை வெளியேற்றவும், மக்களைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து காக்கவும் எதிர்க்கட்சி முன்வரவில்லை.
பொருளாதார நெருக்கடிச் சூழலில் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய விலகக் கோரி நாடு முழுவதும் மக்கள் போராடி வரும் நிலையில், எத்தகைய சூழலிலும் அதிபர் பதவி விலக மாட்டார் என அரசின் தலைமைக் கொறடா ஜான்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதைக் கண்டித்து அவரது அலுவலகத்தின் எதிரிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எப்போதும் ராஜபக்சேவுக்கு ஆதரவளித்து வந்த புத்த பிட்சுகளும், அவர் பதவி விலக வேண்டும் என நெருக்குதல் அளித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து வெளியேற்றி மக்களைக் காக்க எதிர்க்கட்சி முன்வரவில்லை என்பது குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.