குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா ஏப்ரல் 4 ஆம் தேதி மக்களவையிலும் நிறைவேறியது. குற்றவாளியின் கைரேகை உயரம். கால் தடம் , கருவிழி வட்டம், போன்ற விவரங்களை தேசிய குற்ற ஆவணத்தில் சேகரித்து வைக்க இந்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
முன்னதாக இந்த மசோதா பற்றி மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார். இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளித்த அமித் ஷா எந்த ஒரு தனிநபரின் உரிமையிலும் சமரசம் செய்யப்படாது என்று உறுதியளித்தார்.
குற்றவாளிகளை அதிகளவில் சட்டத்தின் முன் நிறுத்த இந்த சட்டத்திருத்தம் உதவும் என்று உறுதியளித்தார்.குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த சட்டம் உதவும் என்றும் அமித் ஷா கூறினார்.மற்ற நாடுகளின் குற்ற சட்ட நடைமுறைகள் மிகவும் கடுமையாக இருப்பதையும் உள்துறை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.