ரஷ்ய அதிபர் புதினை போர்க் குற்றவாளி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
உக்ரைன் புச்சா நகரில் ரஷ்ய படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த பைடன் புதினுக்கு எதிரான போர்க் குற்றங்களை விசாரிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
புச்சா நகரில் மிருகத்தனமான செயல்களை ரஷ்யப் படைகள் நிகழ்த்தி உள்ளதாகவும், அப்பாவி மக்கள் எண்ணில் அடங்கா துயரங்களை சந்தித்ததாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
புச்சா நகரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக கூறப்படுவது ஆத்திரமூட்டுவதாகவும், அங்கு பொது மக்கள் தாக்கப்படவில்லை என ரஷ்யா கூறியுள்ளது.