3 கிராமி விருதுகளை வென்ற அமெரிக்க பாடகி ஒலிவியா ரோட்ரிகோ புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் போது அந்த கோப்பைகளில் ஒன்றை கீழே தவற விட்டு உடைத்தார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற 64வது கிராமி விருது வழங்கும் விழாவில், 19 வயதே ஆன அமெரிக்க பாடகி ஒலிவியா ரோட்ரிகோ 3 பிரிவுகளில் கிராமி விருதுகளை வென்றார்.
3 கோப்பைகளுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் போது அவர் கையில் இருந்த ஒரு கோப்பை கீழே தவறி விழுந்து இரண்டாக உடைந்தது. உதவியாளர் ஒருவர் அதனை ஒட்டி கொடுத்ததும் நிம்மதி பெருமூச்சு விட்ட ஒலிவியா பின்னர் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தார்.