பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், அண்டை நாடுகளின் அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர், இரு நாடுகளில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக ஜெய்சங்கரிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.