எச்டிஎப்சி நிறுவனத்தை எச்டிஎப்சி வங்கியுடன் இணைக்க அதன் இயக்குநரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இரு நிறுவனங்களின் பங்கு மதிப்பு பத்து விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது.
வீட்டுவசதி மேம்பாட்டு நிதி நிறுவனமான எச்டிஎப்சியையும் அதன் துணை நிறுவனங்களையும், எச்டிஎப்சி வங்கியுடன் இணைக்க இயக்குநர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு 2024 நிதியாண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி எச்டிஎப்சியின் 25 பங்குகள் வைத்திருப்போருக்கு எச்டிஎப்சி வங்கியின் 42 பங்குகள் வழங்கப்படும்.
இணைப்புக்குப் பின் எச்டிஎப்சி வங்கியின் 41 விழுக்காடு பங்குகள் எச்டிஎப்சி பங்குதாரர்களிடம் இருக்கும் எனப் பங்குச்சந்தையில் அளித்துள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.