மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து மீண்டும் அறுபதாயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்தியாவுக்குக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வழங்க ரஷ்யா முன்வந்தது உள்ளிட்ட காரணிகளால் அண்மைக்காலமாகப் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.
இந்நிலையில் இன்று பத்தேகால் மணியளவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆயிரத்து 472 புள்ளிகள் உயர்ந்து அறுபதாயிரத்து 749 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை நிப்டி 394 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 65 ஆக இருந்தது. எச்டிஎப்சி நிறுவனத்தை எச்டிஎப்சி வங்கியுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் பங்கு மதிப்பு பத்து விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது.