அஸ்ஸாம் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை குறி வைத்து 17 இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதில் தலைமறைவாக இருந்த பெண் நக்சலைட் ரீமா ஓராங் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். காச்சார் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடைய ரீமா பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தார்.
இதே போல் கரிம் கஞ்ச், திப்ரூகர், தூப்ரி மாவட்டங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்