அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மோசமான வானிலை போன்ற காரணத்தால் வார இறுதியில் 3 ஆயிரத்து 300க்கும் அதிகமான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து விமானங்களைக் கண்காணிக்கும் இணைய தளம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், புளோரிடா, போர்ட் லாடர்டேல் மற்றும் ஆர்லண்டோ ஆகிய இடங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
புளோரிடாவில் கடந்த சனிக்கிழமை புயல் வீசியதால் விமான சேவை கடும் பாதிப்புக்கு உள்ளானதாகவும் அந்த இணையதளம் கூறியுள்ளது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த சனிக்கிழமை புளோரிடாவில் வானிலை மற்றும் தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக ஆயிரம் விமானங்களை ரத்து செய்ததாக அறிவித்துள்ளது.