பிரிட்டனில் மார்ச் 26ஆம் நாளுடன் முடிந்த வாரத்தில் மட்டும் 49 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய வாரத்தில் 43 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பிரிட்டன் புள்ளியியல் முகமை தெரிவித்துள்ளது.
நாட்டு மக்களில் பதின்மூன்றில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவுடன் வாழும் திட்டப்படி தனிமைப்படுத்தல், இலவசப் பரிசோதனை ஆகியவற்றைக் கைவிட்டதும், ஒமிக்ரான் பிஏ.2 வகை கொரோனாவின் பரவல் அதிகரித்ததும் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.