கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் மிகுந்த மார்ச் மாதமாக கடந்த மாதம் இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் மாதத்தில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 33.10 டிகிரி செல்சியஸாகப் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்ற மார்ச் மாதத்தில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியாவில் வழக்கமாகப் பெய்யும் மழை இல்லாமல் போனதும், தென்னிந்தியப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தப் பகுதி தோன்றாததும் வெப்ப நிலை அதிகரித்ததற்குக் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.