சென்னையில் இருந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கான விமானக் கட்டணம் 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு விமானங்களுக்கான தடை நீக்கப்பட்டதால் சென்னையில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் இணைப்பு விமானமாக மும்பை, டெல்லி சென்று அங்கிருந்து பயணிக்கின்றனர். இதன் காரணமாக டெல்லி, மும்பைக்கு அதிக பயணிகள் செல்கிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு தினமும் 20 விமானங்களும், டெல்லிக்கு 19 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு செல்பவர்களே பயணிக்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விமான எரிபொருளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதே கட்டண உயர்வுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.