இந்தியாவுடனான முரண்பாடுகளை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் பாஜ்வா தெரிவித்துள்ளார்.
இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடிக்கும் நிலையில் அது பாகிஸ்தானுக்கு மிகவும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டாக இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் துப்பாக்கிச் சத்தம் ஏதுமில்லாமல் அமைதி நீடித்து வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை மூலமும் அரசாங்க உறவுகள் மூலமும் தீர்வு காண தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான போர் மிகப்பெரிய துயரமான நிகழ்வு என்றும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பாஜ்வா வலியுறுத்தியுள்ளார்