கப்பல் மூலம் இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் டன் டீசல் இலங்கை சென்ற நிலையில், விரைவில் அரிசியும் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், அந்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், மக்கள் அதனை பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கப்பலில் இந்தியா அனுப்பிய டீசல் இன்று காலை இலங்கை சென்றடைந்த நிலையில், அவை அந்நாடு முழுவதும் விநியோகிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல், இலங்கைக்கு 40 ஆயிரம் டன் அரிசியையும் அனுப்ப இந்தியா அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் கடன் உதவியை இந்தியா வழங்க கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தொடர்ந்து உதவிகளை அனுப்ப இந்தியா நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது.