கொலம்பியாவில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியதை அடுத்து, 21 ஆயிரம் பயணிகள் பாதிப்பிற்குள்ளாகினர்.
கொலம்பியாவின் நியோனெக்ரோ (Rionegro) சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாத்தம் (Latam) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320-200 ரக விமானம் புறப்பட்டது. அப்போது, விமானம் தரையிறங்க உதவும் கியர் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்ததால், விமானம் உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே அவசரமாக திரும்பியுள்ளது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனர் பஜார்டோ (Fajardo) குறிப்பிட்டார்.
மேலும், இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக ரியோனெக்ரோவில் இருந்து செல்லும் மற்றும் வருகிற விமானங்கள் 12 மணிநேரத்திற்கு மேல் ரத்து செய்யப்பட்டதால், மற்ற விமான நிலையங்களில் காலதாமதம் மற்றும் விமானங்கள் ரத்தானதாக அவர் கூறினார்.