பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தமது அரசுக்கு எதிராக வெளிநாட்டுச் சதி உள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், அதற்கான சான்றுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், 342 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியின் பலம் 164ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஆளுங்கட்சியின் அதிருப்தி வேட்பாளர்கள் உட்பட எதிர்க்கட்சியின் பலம் 177ஆக அதிகரித்துள்ளது.
தனது அரசைக் கவிழ்க்க வெளிநாட்டுச் சதி உள்ளதாகக் கூறிய பிரதமர் இம்ரான்கான் அது குறித்த சான்றுகளை ராணுவம், உளவுத்துறைத் தலைவர் ஆகியோரிடம் பகிர்ந்துள்ளதாகச் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா போரில் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவும், ஐரோப்பாவும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்றால் அனைத்தையும் மன்னிப்போம் என்றும், இல்லாவிட்டால் வரும் நாட்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகச் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.