அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் இன்றுடன் விலக்கிக் கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இன்றுடன் மகராஷ்ட்ரா உள்பட வட மாநிலங்களில் கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்படுகின்றன. முகக்கவசம் அணிவதும் கைகளை சுத்தம் செய்வதும் மட்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இதுவரை 184 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டு தடுப்பூசி இயக்கம் மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. கடந்த 24 மாதங்களில் தொடர்ந்து கொரோனா சிகிச்சை, கண்காணிப்பு, ஆய்வு, தடுப்பூசி என்ற பல்வேறு கட்டங்களாக கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நோய் கட்டுக்குள் வந்ததுடன், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.