தரையில் இருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் நடுத்தர தூர ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும், இஸ்ரேலின் விண்வெளி மையமும் இணைந்து தயாரித்த இந்த ஏவுகணை, ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு முறை ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டதாகவும், இரண்டு முறையும் இரண்டு வெவ்வேறு தூரத்தில் அதிவேகத்தில் சென்ற வான் இலக்குகளை ஏவுகணை தாக்கி அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.