கடந்த 2014ம் ஆண்டு முதல் எம்பிபிஎஸ் இடங்கள் 75 விழுக்காடும், முதுகலை மருத்துவ இடங்கள் 93 விழுக்காடும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்கள் அவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் அளித்த அறிக்கையில், இந்தியாவில் மருத்துவக் கல்வி பயிற்றுவிக்கும் முறையை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்.