புதுச்சேரியில் இளநீர் விற்பனை செய்த பெண்ணிடம் செல்போனை பறித்துச் சென்று சேட்டை காட்டிய குரங்கால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி உழவர் சந்தை அருகே இளநீர் விற்பனை செய்யும் பெண் ஒருவர் தனது செல்போனை கீழே வைத்துவிட்டு வியாபாரம் செய்துகொண்டிருந்தார்.
அருகில் இருந்த மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்த குரங்கு ஒன்று செல்போனை வாயில் கவ்விக்கொண்டு மரத்தில் ஏறியது.
இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் சத்தம் போட்டனர். அந்த போனுக்கு தொடர்ந்து கால் செய்த போதும் குரங்கு அதனை கீழே வீசாமல் மரத்துக்கு மரம் தாவியவாறு விளையாடிக் கொண்டிருந்தது.
நீண்ட நேரம் கடந்த நிலையில், ஒருவழியாக குரங்கு செல்போனை கீழே வீசியது. சிறிய ரக பட்டன் போன் என்பதால் சேதமடையாமல் தப்பியது.