கிரீஸ் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்ததால், எல்லையோரங்களில் வசிப்பவர்கள் அண்டை நாடான பல்கேரியாவிற்கு சென்று வாகனங்களில் பெட்ரோல் நிரப்பி வருகின்றனர்.
ரஷ்யா-உக்ரைன் போரால் கிரீஸில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 167 ரூபாயாக உயர்ந்தது.
இதைவிட அண்டை நாடான பல்கேரியாவில் 45 ருபாய் குறைவாக விற்கப்படுகிறது. அது மட்டுமின்றி, உணவு பொருட்கள் மற்றும் சிகரெட் பல்கேரியாவில் மலிவான விலைக்கு கிடைப்பதால், கிரீஸ் நாட்டு மக்கள் எல்லை தாண்டி சென்று பெட்ரோல் நிரப்பி வருகின்றனர்.