அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்காக இந்தியாவிடம் மேலும் 1 பில்லியன் டாலர் கடனுதவியை இலங்கை கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்த இலங்கை நிதியமைச்சர் பாசில் ராஜபக்சே, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடனுதவி அளிக்க கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்திய மதிப்பில் 7 ஆயிரத்து 580 கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில் மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு நிதியமைச்சரை சந்தித்து பேசினார். இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் நிதியுதவி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.