ஆஸ்கார் மேடையில் அனைவரது முன்னுலையிலும் தன் கன்னத்தில் பளார் என அறைந்த ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீது காவல்துறையில் புகார் கொடக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் கிரிஸ் ராக் மறுத்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தன் மனைவியை கேலி செய்ததாக தொகுப்பாளர் கிரிஸ் ராக்கை நடிகர் வில் ஸ்மித் ஓங்கி அறைந்த சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இந்நிலையில், வில் ஸ்மித்தின் இந்த செயலுக்காக அவர் மீது புகார் கொடுக்க கிரிஸ் ராக் மறுத்துவிட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.