நீர் நிலைகளை தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வரும் சென்னையைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அருண் கிருஷ்ணமூர்த்தி, தான் வசிக்கும் பகுதியில், ஏரிகள் மற்றும் குளங்களை தூய்மைப்படுத்துவதற்கு பிரசாரம் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
அவர், 150க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்களை தூய்மைபடுத்தும் பணியை பொறுப்பாக எடுத்து கொண்டு அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.