நாட்டிலே முதல் முறையக குஜராத்தின் ஹசிரா துறைமுக நகரில் ஸ்டீல் கழிவுகளை கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
சோதனை அடிப்படையில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்டவைகள் ஒன்றிணைந்து சாலையை அமைத்துள்ளன.
மற்ற சாலைகளை காட்டிலும் 30 சதவீதம் தடிமன் குறைக்கப்பட்டுள்ளதாகவும், மழை மற்றும் பேரிடர் காலங்களில் சாலை சேதமடைவதை தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னோடித் திட்டமாக ஸ்டீல் சாலை கருத்தப்படுவதாகவும், வரும் காலங்களில் நெடுஞ்சாலை மற்றும் இதர சாலைகளையும் ஸ்டீலை பயன்படுத்தி அமைக்கும் திட்டமுள்ளதாகவும், இதனால் பெரும் நிதி செலவு குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.