சவுதி அரேபிய அரசின் எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் இரு சேமிப்பு கிடங்கின் மீது ஏமன் ஹவுதி படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
விண்ணை முட்டும் அளவுக்கு தீ வெளியேறிய நிலையில், தாக்குதலுக்கு ஏமன் ஹவுதி கிளர்ச்சிக் குழு பொறுப்பேற்றுக் கொண்டது. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சவுதி அரேபியா பார்முலா ஒன் கார்பந்தயம் அதே பகுதியில் இன்றும் நாளையும் நடைபெற உள்ள நிலையில் தாக்குதல் சம்பவம் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்திஉள்ளது.