சென்னை திருவொற்றியூரில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட யோகா மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தானம் என்பவர் பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக யோகா சொல்லி கொடுத்துள்ளார்.
அப்போது அவர் மாணவிகளிடம் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தானம் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் சந்தானம் முறையாக யோகா பயிற்சி பெறாமல் சான்றிதழ் இல்லமால் போலியாக யோககா பயிற்சி வகுப்பு நடத்தி வந்ததும் தெரிய வந்தது .