மேற்குவங்க மாநிலத்தில் இருந்து வங்கதேசம் செல்லவிருந்த சரக்கு கப்பல், அளவுக்கு அதிகமாக சரக்குகள் ஏற்றப்பட்டதை அடுத்து கவிழ்ந்தது.
மெரைன் டிரஸ்ட்-1 என பெயரிடப்பட்ட அந்த கப்பல் இந்தியா - வங்கதேசம் இடையே சரக்கு போக்குவரத்தினை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், இன்று காலை கொல்கத்தாவில் உள்ள ஷியாம பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கப்பலில் சரக்குகள் ஏற்றப்பட்டன.
வங்கதேசத்தின் சிட்டகாங் நகருக்கு செல்லவிருந்த அந்த கப்பலில் அளவுக்கு அதிகமாக சரக்குகள் ஏற்றப்பட்டதை அடுத்து, பாரம் தாங்காமல் ஒருபுறமாக கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில், கப்பலில் ஏற்றப்பட்ட 120 கண்டெயினர்களில் 18 கண்டெயினர்கள் முழுமையாக நீரில் மூழ்கின. இந்த விபத்தில் சரக்கு கப்பலில் இருந்தவர்கள் உயிர்த்தப்பியதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.