சென்னையில் மாநகரப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய விவகாரத்தில் பள்ளி மாணவனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரட்டூரில் இருந்து பிராட்வே சென்ற மாநகரப் பேருந்தில் ஏறிய தனியார் பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடியும், பேருந்தின் மேலே ஏறியபடியும் பயணித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, காவல்துறையினர் அவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில், மீண்டும் அந்த பேருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது அதில் ஏறிய 4 மாணவர்களுள் ஒருவன் ஓட்டுநர் காளிதாசை அறைந்துவிட்டு தப்பினார். இதுகுறித்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரித்த போலீசார், ஓட்டுநரை தாக்கிய 12ஆம் வகுப்பு மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.