சென்னையை அடுத்த மாங்காடு அருகே தேசிய கபடி வீராங்கனை ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மதனந்தபுரத்தைச் சேர்ந்த பானுமதி என்பவர் முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார். நேற்று மதியம் வீட்டிற்கு வந்த பானுமதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மாங்காடு போலீசார் நடத்திய விசாரணையில், உரிய வேலை கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.