ஹிட்லரின் நான்கு நாஜி வதை முகாம்களில் இருந்து உயிர்தப்பிய நபர் ரஷ்யா படைகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளார்.
ஹிட்லரின் புஷென்வால், பெர்கென் - பெல்சன் உள்ளிட்ட வதை முகாம்களில் இருந்து தப்பிய 96 வயது முதியவரான போரிஸ் ரோமன்சென்கோ (Borys Romanchenko) கொல்லப்பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் குலேபா தெரிவித்துள்ளார்.
கார்கிவ் நகரில் ரோமன்சென்கோவின் வீட்டை ரஷ்யப் படைகள் வீசிய வெடிகுண்டு தாக்கியதை அடுத்து அவர் உயிரிழந்ததாக குலேபா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹிட்லரிடம் இருந்து உயிர்பிழைத்த அவர் தற்போது புதினால் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.