சென்னையில் மாற்றுத்திறனாளிகளுடன் அமைச்சர் கீதா ஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும், தசைச்சிதைவு உள்ளிட்ட கடும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.