இந்தியாவில் புதிதாக ஆயிரத்து 581 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றுக்கு 33 பேர் பலியாகியுள்ள நிலையில், 2 ஆயிரத்து 741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் 23 ஆயிரத்து 913 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.