உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 847 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 847 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்து 400 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலன மக்கள் ரஷ்யாவின் பன்முனை ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணை, விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேசமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாகவும், தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கக்கூடும் என ஆணையம் தெரிவித்துள்ளது.