உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உணவு மற்றும் எரிசக்திக்கான விலை உயர்வு மூலம் 4 கோடிக்கும் அதிகமான மக்களை தீவிர வறுமையில் தள்ளும் என்று உலகளாவிய மேம்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்த அறிக்கையில்,கடந்த 2007 மற்றும் 2010ம் ஆண்டுகளில் ஏற்பட்ட விலை ஏற்றத்தை விட அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதி உலக கோதுமை ஏற்றுமதியில் கால் பங்கிற்கும் அதிகம் என்றும், இதனை இறக்குமதி செய்யும் நாடுகள் மாற்றுப் பொருட்களுக்கு போட்டியிடுவதால் உணவுப் பொருட்களின் விலை உயரும் எனவும் உலகளாவி மேம்பாட்டு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.