நாட்டின் நேரடி வரி வருவாய் நடப்பு நிதி ஆண்டில் 48 சதவீதம் உயர்ந்து, 13 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
முந்தைய நிதி ஆண்டில் நேரடி வரியாக 9 லட்சத்து 18 ஆயிரத்து 430 கோடி ரூபாய் வசூலாகி இருந்தது.
பெரு நிறுவனங்கள் வரியாக 7 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாயும், தனி நபர் வருமான வரியாக 6 லட்சத்து 40 ஆயிரத்து 588 கோடி ரூபாயும் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.