ஜப்பான் பிரதமர் பூமியோ கிசிடா இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக மார்ச் 19ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பூமியோ கிசிடா இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். 19 ஆம் தேதி அன்று டெல்லியில் தொடங்கும் இந்திய ஜப்பானிய மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
இரு நாடுகள் இடையே பல துறைகளில் உள்ள ஒத்துழைப்பை மறு ஆய்வு செய்யவும், மேலும் வலுப்படுத்தவும் இந்திய ஜப்பானிய மாநாடு நல்ல வாய்ப்பாக அமையும் என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.