கர்நாடக மாநிலம் சிர்சியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான மாஸ் சயீத்தை, நாகப் பாம்பு தாக்கிய வீடியோ வைரலாகி உள்ளது.
தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதற்காக தான் பிடித்த 3 நாகப்பாம்புகளை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார். பாம்புகளுக்கு முன்னால் அமர்ந்து கொண்டு அவற்றின் வால்களை இழுத்து, கைகளை நகர்த்தி, பாம்புகளைத் தான் அசைவது போல அசைக்க முற்பட்டார். அப்போது நாகப்பாம்பு ஒன்று எதிர்பார்க்காத வேளையில் சட்டென்று அவர் மீது பாய்ந்து அவரது முழங்காலை கடித்தது. அதனை இழுக்க முயன்றும் பாம்பு தன் பிடியை விடவில்லை.
20 வயதான மாஸ் சயீத் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாம்பு கடித்த பின்னர் 46 விஷ எதிர்ப்பு ஊசிகள் அவருக்கு போடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
நாகப்பாம்புகளைக் கையாளும் ஒரு மோசமான வழிமுறை இது" என்று குறிப்பிட்டு ஐஎப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது டுவிட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.